கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நேற்று மாலை அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத குருமார்கள் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறப்பு நடத்தினர். பின்னர் அவர்களிடம் ஆசி பெற்றார். சூலூர் எம்எல்ஏ சுகுமார், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர் சக்திவேல் பாராட்டப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் கேக் வெட்டி வழங்கப்பட்டது. அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சி. கே. மணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.