இதனால் அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இருப்பினும் கார்த்திக், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூன் 8) முதல் மனைவிக்கும், கார்த்திக்கிற்கும் மீண்டும் இது தொடர்பாக தகராறு எழுந்தது. இதில் கோபமடைந்த முதல் மனைவி வீட்டை விட்டு வெளியேறி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் கார்த்திக் தனது அறைக்குள் சென்று உள்புறமாக தாழிட்டு கொண்டார்.
இரண்டாவது மனைவி நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதனால் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வந்து உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.