கோவை: பத்திரிகையாளர் எனக் கூறி மிரட்டியவர் கைது

கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையம் சாலையில் உள்ள மகாலட்சுமி புத்தகக் கடையில், பத்திரிகையாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய பிரபு (48) என்பவர், மதுபோதையில் ரூ.5,000 பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பணம் வழங்க மறுத்ததால், கடை பொருட்கள் தடை செய்யப்பட்டவை எனக் கூறி பத்திரிகையில் எழுதுவதாகவும் மிரட்டினார். இதுபற்றி வந்த புகாரின் பேரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் அவரை கைது செய்து, நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி