கோவை: வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில், தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்குகள் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அப்துல் சமது, கே.ஆர்.ஜெயராம், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். 

செடி கொடிகள் மற்றும் தாவரவியல் துறையில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து அதிகாரிகள், பேராசிரியர்களிடம் குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, கோவை மாவட்டம் புற்றுநோய் பரிசோதனையில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியருக்கும் நிர்வாகத்தினருக்கும் பாராட்டுகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி