இதன் காரணமாக கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த 10-ம் தேதி ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.500-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.1,200-ஐ தொட்டுள்ளது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவடைந்த பின்னரே பூக்கள் விலை குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்