கோவை: ஓட்டல் அறையில் ரூ. 1. 70 லட்சம் திருட்டு

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹன்ஸ் திங்ரா (49). இவர் பூஜைக்கு தேவையான குத்துவிளக்கு, தாம்பூலம் உள்ளிட்ட பித்தளை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹன்ஸ் திங்ரா வியாபாரம் நிமித்தமாக கோவை வந்தார். வெறைட்டிஹால் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி பொருட்கள் விற்று வசூலான ரூ. 1. 70 லட்சத்தை தனது அறையில் வைத்து விட்டு சாப்பிட சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த ரூ. 1. 70 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. அறைக்குள் நுழைந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்ஸ் திங்ரா இதுகுறித்து வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி