மேலும், அவர்களிடமிருந்து MDMA (எக்ஸ்டசி), MDMA பவுடர், கொக்கைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா, குஷ், ரூ. 25 லட்சம் ரொக்கம், பணம் எண்ணும் இயந்திரம், போதைப் பொருள் எடை பார்க்கும் இயந்திரம், கொரோனா எக்ஸ்ட்ரா பீர் பாட்டில்கள், ஹோகார்டன் பீர் பாட்டில்கள், சிவைட் மெர்லோட் வைன் பாட்டில்கள், மூன்று கார்கள் மற்றும் 12 செல்போன்கள் உள்ளிட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், மணிகண்டன் கோயம்புத்தூர் ராமநாதபுரத்தை சேர்ந்த பிதேஷ் லம்பா மூலம் மகாராஷ்டிராவிலிருந்து ஜேக்கப் பிராங்கிளின் மூலமாக MDMA பில்ஸ் மற்றும் கொகைன் ஆகியவற்றை பெற்று விற்றதும், கிருஷ்ணகாந்த் ரோகன் ஷெட்டி இமாச்சல பிரதேசத்திலிருந்து கஞ்சா மற்றும் உயர்தர குஷ், கிரீன் கஞ்சா போன்ற பொருட்களை தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.