கோவை மாவட்டம் காந்திபுரத்தில் இருந்து வாகராயம்பாளையம் நோக்கி வந்த 98-A என்ற வழித்தட எண்ணைக் கொண்ட அரசு பேருந்து, வாகராயம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு திரும்பும் போது இந்த விபரீதம் நிகழ்ந்தது. பேருந்தை திருப்ப முயன்ற ஓட்டுநருக்கு ரிவர்ஸ் கியர் விழாமல் போனதால் பேருந்தை நகர்த்த முடியாமல் போனது. சாலையின் நடுவே பேருந்து நின்றதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் நீண்ட நேரம் போராடியும் ரிவர்ஸ் கியரை சரி செய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், பேருந்து சாலையின் நடுவே நிற்பதையும், ஓட்டுநர் மற்றும் பயணிகள் செய்வதறியாது தவிப்பதையும் காண முடிகிறது.