கோவை கண்ணப்பன் நகரில் நசீம் என்பவருக்குச் சொந்தமான மர இழைப்பகத்தில் நேற்று (பிப்ரவரி 5) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மரப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மரப்பொருட்கள் அதிகமாக இருந்ததால் தீ வேகமாகப் பரவி அருகிலுள்ள வீடுகளின் கண்ணாடிகளையும் உடைத்தது. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர். கவுண்டம்பாளையம் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.