இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலேயே மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மாறாக, பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் மதுபானங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் 5 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சிவாஸ் மதுபான ஆலை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஆலை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அலுவலகத்தில் மட்டும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் நோக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த முழுமையான விவரங்கள் சோதனை முடிந்த பின்னரே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி
கோவை: போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்!