கோவை அருகே தடாகம் வன எல்லைப் பகுதியில் நேற்று பழனிச்சாமி (68) என்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். ஆடு மேய்க்கச் சென்றவர் வீடு திரும்பாததால் தேடியபோது, காப்புக் காட்டு எல்லையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உடலில் சிராய்ப்பு காயங்கள் இருப்பதால், வனவிலங்கு தாக்குதலா அல்லது தவறி விழுந்ததில் இறந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக வனத்துறை காத்திருக்கிறது.