கோவையில் ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோகன் (75) என்பவர் இன்று ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் நடந்து சென்றார். எதிர்பாராத விதமாக அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அசோகனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.