இதில் சம்பவ இடத்திலேயே ஓதியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஓதியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் சமீப காலமாக ரயில் விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே தண்டவாளங்களில் பொதுமக்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், ரயில்வே கேட் அருகே கவனமாக இருக்க வேண்டும் என்றும் ரயில்வே போலீசார் எச்சரித்து உள்ளனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை