கோவை: இரட்டை ரயில் பாதை - மக்கள் மகிழ்ச்சி

கோயம்புத்தூர் மாவட்ட ரயில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையான இருகூர்–போத்தனூர் இடையிலான 10.77 கி.மீ ஒற்றை ரயில் பாதையை இரட்டைப் பாதையாக மாற்ற மத்திய அரசு ₹277.42 கோடி மதிப்பீட்டில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ரயில்வே அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னை–கோவை–கேரளா வழித்தடத்தில் ரயில் தாமதம் குறைந்து, பயண நேரம் சுருங்கும். தினமும் கூடுதலாக 15 பயணிகள் ரயில்கள் இயக்கவும், சரக்கு போக்குவரத்து திறன் ஆண்டுக்கு 3.12 மில்லியன் டன் வரை உயரும். போத்தனூர் சந்திப்பு முக்கிய முனையமாக வளர்ந்து, வேலைவாய்ப்புகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி