பொள்ளாச்சியில் சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று (மே 30) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேர் இழுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் முறைகள் மாற்றம், ஊழியர் நிரந்தரம், மின் கட்டண பிரச்சனைகள் பரிசீலனை செய்யப்படுவதாக கூறினார். மேலும், கோவையை சிறந்த மாநகரமாக்க அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.