தமிழகத்தில் டாஸ்மாக் உள்ளிட்ட பல ஊழல்கள் தி. மு. க ஆட்சியில் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றை மூடி மறைக்கவே மத்திய அரசை குறை சொல்லும் பழக்கத்தை முதல்வர் வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
சாதி வாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி தேசிய அளவில் அறிவித்துள்ளதை எடுத்துரைத்த அவர், சமூக நீதிக்காக இது முன்னெடுக்கப்படும் என்றும், எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு இல்லாமல் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தியிருப்பதையும் நினைவுபடுத்தினார்.
மக்களை தவறாக வழிநடத்துவதை முதல்வர் நிறுத்தி, ஆட்சியை முறையாக நடத்த வேண்டும் என எல். முருகன் வலியுறுத்தினார். திமுக அரசு முருக பக்தர்களுக்கு எதிராக இருப்பதாகவும், அதனை எதிர்த்து மக்கள் தன்னிச்சையாக முருகன் மாநாட்டை நடத்துகின்றனர் என்றும் கூறினார். தமிழ் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிக்கிறது என்பதைச் சொல்லும் வகையில் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.