கோவை: சவுக்கு சங்கர் வழக்கு; 122 பேரிடம் விசாரணை

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் ஒரே வழக்காக சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்கீழ், மாநிலத்தின் 13 மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் உள்பட பல முக்கியரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சம்மன்கள் அனுப்பப்பட்டு இதுவரை 122 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் சிலரை நேரில் வரவழைத்து விசாரித்துள்ளனர். மேலும் சிலரிடம் சைபர் கிரைம் அதிகாரிகள் நேரில் சென்று அவர்களிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை முழுமையாக முடிவுக்கு வர, இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி