கோவை: செல்போன் பறிப்பு: இரண்டு பேர் கைது

கோவை காந்திபுரத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவன ஊழியர் மதிவாணன் (41) அழகப்பா வீதியில் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றபோது, இரண்டு பேர் அவரது கைபேசியை பறித்து தப்பினர். இந்த தொடர்பாக ரத்தினபுரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், சுந்தராபுரத்தை சேர்ந்த முகமது சுகைல் (22) மற்றும் செல்வபுரம் நூர்ஷா (22) எனும் இருவரும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி