கோவை: புற்றுநோய் பரிசோதனை வாகனம் தொடக்கம்!

கோவை மாவட்ட சுகாதாரத் துறையின் புற்றுநோய் ஆரம்பகட்ட பரிசோதனை திட்டத்திற்காக, ரூட்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் வழங்கிய சிறப்பு பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் கருப்பைவாய், மார்பக, வாய் புற்றுநோய் அறிகுறிகள் கொண்ட பயனாளிகளை ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும். வாகனத்தின் எரிபொருள், பராமரிப்பு, ஓட்டுநர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ரூட்ஸ் குரூப் நிறுவனம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) டாக்டர் சுமதி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பாலுசாமி, ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கவிதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி