கோவை: தேனீக்கள் கொட்டியும் அசராத கரடி.. வீடியோ வைரல்

கோவை மருதமலை முருகன் கோவிலில் நேற்று, புதிதாக அமைக்கப்பட்ட லிப்ட் அருகே இருந்த பாறை இடுக்கில் இருந்த தேன் கூட்டை கரடி ஒன்று உடைத்து தேனை ருசித்தது. நூற்றுக்கணக்கான தேனீக்கள் கொட்டியபோதும் கரடி அசராமல் தேனை சாப்பிட்ட காட்சி பக்தர்களால் மொபைலில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவில் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி