கோவை: முன்பகையால் வீட்டை இடிக்க முயற்சி - பெண் கண்ணீர் புகார்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் பகுதியில், முன்பகை காரணமாக தவறான தகவல் அளித்து, ஆக்கிரமிப்பு என கூறி செல்வராஜ் என்பவரின் வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டது. செல்வராஜின் மனைவி மல்லிகா மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உரிய ஆவணங்கள் சரிபார்க்காமல் அதிகாரிகள் செயல்பட்டதாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி