கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்கள் நெற்றியில் நாமம் இட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பல ஆண்டுகளாக ரூ. 2,000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இது தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தேர்தலுக்கு முன் எங்களை அழைத்து அரசு பேச வேண்டும். எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும், தமிழ்நாடு அரசு தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.