கோவை மத்திய RTO அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான H வடிவ டிராக்கில் கார் ஓட்டும் சோதனை கடந்த 2 வாரங்களாக கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் பங்கேற்றவர்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தரகர்கள் மூலம் மற்ற RTO அலுவலகங்களில் எளிதாக உரிமம் பெறும் நிலை தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த கடுமையான சோதனையை அனைத்து RTO அலுவலகங்களிலும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.