கோவை அருகே தடாகம் வரப்பாளையம் பகுதியில், ஒற்றைக் காட்டு யானை ஒன்று வாழைத் தோட்டத்தில் புகுந்து பழங்களை தின்றதோடு, டார்ச் லைட் அடித்து விரட்ட முயன்ற விவசாயியையும் துரத்திச் சென்றது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி கிராமங்களில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து சேதப்படுத்துவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.