கோவை: பணம் வைத்து சேவல் சண்டை; 16 பேர் கைது

கோவை, கருமத்தம்பட்டி அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக 16 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கொள்ளுப்பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் சேவல் சண்டை நடைபெறுவதைக் கண்டு ஏழு பேரைக் கைது செய்தனர். விசாரணையில் இடம் கொடுத்தோர் உட்பட மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 16 பேரிடமிருந்து ஐந்து சேவல்கள், ₹9,700 ரொக்கப் பணம், 12 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி