கோவை காந்திபுரத்தில் இன்ஸ்டாகிராமில் யாரோ ஒருவருடன் பழகியதை தாய் கண்டித்ததால் மாயமானதாக கூறப்பட்ட 16 வயது சிறுமி, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வெள்ளகோவில் போலீசார் சிறுமியை மீட்டனர். இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை தாய் கண்டித்ததால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது. சிறுமியை மீட்ட ரத்தினபுரி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.