கோவை கவுண்டம்பாளையம் கல்பனா திரையரங்கில் சுகாதாரமற்ற கழிவறைகளை ரசிகர் ஒருவர் மொபைலில் பதிவு செய்ததால், ஊழியர்கள் அவரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைவேளையின் போது கழிவறையின் மோசமான நிலையைக் கண்டு அதிருப்தியடைந்த ரசிகர் வீடியோ எடுத்தபோது, ஊழியர்கள் அவரைச் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பார்வையாளர்கள் திரையரங்கு நிர்வாகத்தை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.