கோவை மாவட்டம் மலைப்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (34), தந்தை ராக்கியப்பனுடன் கூடி தேங்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று, அவர்களது தோட்டத்தில் உள்ள கிணற்றின் மோட்டார் இயங்கவில்லை. அருகில் விசாரித்ததில் டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போனது தெரியவந்ததால், பியூஸ் போட டிரான்ஸ்பார்மரில் ஏறிய பாலசுப்பிரமணியத்தை மின்சாரம் தாக்கியது. அவர் துடித்த நிலையில் மின் கம்பியில் சிக்கினார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு முதலில் தனியார் ஆஸ்பத்திரி, பின்னர் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.