கோவை: ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் சடலம் (VIDEO)

பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ், ரத்த காயங்களுடன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு நேருநகர் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே ரத்தத்தில் தவழும் நிலையில் ஒருவர் உடல் காணப்பட்டதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பொள்ளாச்சி காவல் உதவி ஆணையர் சிருஷ்டி சிங் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். 

மரணமடைந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், அவரது கைபகுதியில் ரஜினி என எழுதிய பச்சைக் குறி காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை ஈ. எஸ். ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி