பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவி அருவியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் அருவி பகுதிக்கு தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளனர். ஆழியார் அணை பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவியில் கொட்டும் நீரின் ஒலி பல கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் கேட்கிறது. மழை குறைந்து நீர்மட்டம் சீரடைந்த பின்னரே அருவி மீண்டும் திறக்கப்படும் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.