பொள்ளாச்சி: பஞ்சர் கடையில் லாரி டயர் வெடித்து பீகார் இளைஞர் பலி

பொள்ளாச்சி அருகே பஞ்சர் கடையில் வேலை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் குமார் (18 வயது) என்பவர், லாரி டயருக்கு காற்று நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிக அழுத்தம் காரணமாக டயர் வெடித்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி