பீளமேடு பகுதியில் மூதாட்டி கண்ணியம்மாளை மது பாட்டிலால் குத்திக் கொன்ற வழக்கில், குற்றவாளி கார்த்திக்கிற்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2, 500 அபராதமும் விதித்தது. 2020ஆம் ஆண்டு உறவினரான தர்மராஜுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கார்த்திக் அவரை குத்தியபோது, தலையிட்ட பாட்டி கண்ணியம்மாளையும் மது பாட்டிலால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.