கோவை: வாலிபர் வெட்டிக்கொலை.. நண்பர் போலீசில் சரண்

சூலூர் அருகே நீலாம்பூர் ஆச்சான்குளம் பகுதியில் குளக்கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், பரமக்குடியைச் சேர்ந்த கோகுல் (23) மற்றும் ஹரிஷ் (29) ஆகியோர் சேர்ந்து அரியலூரைச் சேர்ந்த சரவணனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். கோகுலின் தாயை சரவணன் தகாத வார்த்தைகளால் பேசியதால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கோகுல் நேற்று போலீசில் சரணடைந்தார். ஹரிஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி