கோவை: கார் விபத்தில் இளைஞர் பலி; மூவர் படுகாயம்

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவர் தனது நண்பர்களான லோகேஷ் (25), பிரவீன்குமார் (26) மற்றும் மேலும் ஒருவருடன் துடியலூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் காரில் பயணித்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜேஷ் மற்றும் மற்ற இரு நண்பர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி