கோவை: கஞ்சா வழக்கில் வாலிபர் அதிரடி கைது

கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரோந்து பணியின்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சதீஷ் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த அவரை சோதனை செய்தபோது, அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது சதீஷ் தடுமாறி விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி