கோவை: தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த தொழிலாளி பலி

பொள்ளாச்சி, மாரப்பன் சந்து பகுதியைச் சேர்ந்த 60 வயது சீனிவாசன், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறையில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். 

சம்பவத்தன்று, சீனிவாசன் தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். இதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நேற்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி