மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி வளாகத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டபோது, வளாகத்தின் பின்புறம் யானைகள் கூட்டமாக நகர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பினர்.