இதுகுறித்து பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விரைந்து வந்து யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டும் இதே பகுதியில் யானை சுற்றுச்சுவரை சேதப்படுத்தியதால், யானையின் வழித்தடத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.