கோவை: ப்ரோசோன் மாலில் டிரைனேஜ் கசிவால் அவதி

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ப்ரோசோன் மாலில், டிரைனேஜ் குழாய் உடைந்து கழிவுநீர் வெளிவரும் சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாலுக்குள் உணவு டெலிவரி எடுக்க வருவோர் நிற்கும் பகுதிக்கே நேரடியாக கழிவுநீர் கசியும் வகையில், லிப்ட் வரை தண்ணீர் பரவியுள்ளது. இதனால் அந்த வழியாக நடக்க வேண்டிய வாடிக்கையாளர்கள், உணவுப் பணியாளர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எங்கே போனாலும் இங்கு நாறும் வாசனை, கீழே வழியும் கழிவுநீர் எங்களைப் பாதிக்கிறது, என உணவு டெலிவரி வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினார். செயல்பாட்டின்மையால் ஏற்பட்ட இந்த நிலைமைக்கான பதிலாக, நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி