இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 318 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.10,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் ஆர்டர் செய்து, மும்பையில் இருந்து வாங்கி கோவைக்கு கூரியர் மூலம் வரவழைத்து, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. ஒரு மாத்திரை ரூ.30 முதல் 50 ரூபாய்க்கு வாங்கி ரூபாய் 500 வரை விற்பனை செய்து உள்ளனர். தற்போது கூரியர் மூலம் போதை மாத்திரைகள் ஆர்டர் செய்து பெறுவது அதிகரித்து வருகிறது. எனவே அதனைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!