கோவை விமான நிலையத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் நீலாம்பூரில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்று தொண்டர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலைஞர் கணைகள் புத்தகத்தை ஒரு தொண்டரிடமிருந்து முதல்வர் பெற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து மேற்கு மண்டல BLA மாநாட்டில் பங்கேற்கிறார்.