கோவை: சில்லி கொம்பன் ஒற்றை காட்டு யானை - தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் – வால்பாறை சாலையில் இன்று காலை சில்லி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து சாலையில் நடைபயிற்சி செய்தது. இதனால், சுற்றுலா வாகனங்கள் செல்லாதவாறு வனத்துறையினர் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினர். யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதை அடுத்து போக்குவரத்து சீரானது. வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி