கோவையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் (35) என்பவரிடம், நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரை ரயில் நிலையம் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். டவுன்ஹால் பைவ் கார்னர் பகுதியில் சென்றபோது, ஆட்டோவில் இருந்த நபர் அன்பரசனை மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 13 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.