கோவை: மளிகை கடையில் ரூ. 1½ லட்சம் திருட்டு

கோவை ஆர். ஜி. வீதியில் மளிகை கடை நடத்தும் மங்கிலால் (62) என்பவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க சென்றபோது, பின்பக்க ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில், மேஜை டிராயரில் இருந்த ரூ. 1½ லட்சம் பணம் மர்ம ஆசாமியால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் மங்கிலால் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் ஒருவரின் திருடும் காட்சி இருப்பதை கண்டறிந்தனர். சம்பவம் தொடர்பாக நேற்று வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி