கோவை: அரிசி ஏற்றிய லாரி பள்ளத்தில் சிக்கி விபத்து

கோவை சிரியன் சர்ச் சாலையில், அரிசி ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவருக்கு சொந்தமான இந்த லாரியை கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்னை மாதவரம் பகுதியிலிருந்து 16 டன் அரிசியுடன் கோவைக்கு வந்த லாரி, சாலையோர பிளாட்பாரத்தில் நிறுத்த முயன்றபோது சக்கரம் பள்ளத்தில் சிக்கி சாய்ந்தது. லாரி அருகிலிருந்த காம்பவுண்டு சுவரில் சாய்ந்து நின்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஆர். எஸ். புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி