அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், முதல்வர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதன் காரணமாகவே இதுபோன்ற போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் முதலமைச்சர் அவர்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இப்பந்தயத்தில் இரட்டை பெரிய மாடு கொண்ட பிரிவில் வெற்றி பெற்ற பெரிய இரட்டை மாட்டிற்கு முதல் பரிசாக இருபதாயிரம் ரூபாயும், சிறிய மாட்டிற்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!