பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள நாற்தாங்கால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் 4,745 மரக்கன்றுகளை நேரில் பார்வையிட்ட அவர், பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடக்கப்பள்ளியில் ரூ. 35,000 மதிப்பில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்பை பார்வையிட்ட கலெக்டர், மார்ச் மாதத்திலிருந்து அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், தேவையான இடங்களில் புதிய அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.