கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். ஹவுசிங் யூனிட், ஏ. ஆர். நகர், தாமரை நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.