கோவை மாவட்டம் அன்னூர், துடியலூர் பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன, மின் கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில், அன்னூர் அருகே தனியார் குளிர்பான நிறுவனத்தில் பணியாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் குமார் (20), வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.