கோவை: விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் மஹாபிரதோசம் விழா

கோவை துடியலூர் அருகிலுள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் சிவராத்திரி மஹாபிரதோசம் விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, பின்னர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விஸ்வநாயகி அம்பிகை உடனுறை விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. வடமதுரை, துடியலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் பி. வி. மணி தலைமையில் விழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி